• Apr 15 2026

VJ பார்வதியிடம் மண்டியிட்ட பிக்பாஸ் டீம்.! கம்பேக் கொடுப்பாரா? அக்சப்ட் பண்ணிய கமருதீன்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 9 டைட்டில் வின்னர் ஆக வரவேண்டிய VJ பார்வதி தன்னுடைய  தவறான செய்கையால் ரெட் கார்ட் பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். 

இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து துடித்துடிப்பாக காணப்பட்ட போட்டியாளராக பார்வதி காணப்பட்டார். அவர் அந்த வீட்டில் என்னதான் சண்டை சச்சரவுக்கு  பெயர் போயிருந்தாலும் அவருடைய கேம் பிளே  நன்றாக இருந்தது. 

அதேபோல ஒவ்வொரு வாரமும் விஜய் சேதுபதியிடம்  ஏதாவது ஒரு சேட்டைக்காக வாங்கி கட்டிக் கொள்வார். VJ பார்வதி விமர்சிக்கப்பட்டாலும்  அவர் ரசிகர்களிடம்  பெரும் ஆதரவை பெற்றார்.

மேலும் இவர் நிச்சயமாக பைனல் லிஸ்டிலும் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆனாலும்  டிக்கெட் டூ பினாலே கார் டாஸ்க் சாண்ட்ராவை வெளியே தள்ளியபோது  பலரையும் கொந்தளிக்க வைத்தது. 


இதை அடுத்து பார்வதிக்கும் அவருக்கு உடந்தையாக இருந்த கமருதீனுக்கும் ரெட் கார்ட் கொடுத்து  வெளியேற்றினார் விஜய் சேதுபதி. 

பிக் பாஸ் இருந்து வெளியே வந்த பார்வதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் தனக்கு ஆதரவாக ரசிகர்கள் பகிர்ந்த பதிவுகளை பகிர்ந்து  டைட்டில் வின்னர் ரேஞ்சுக்கு பதிவிட்டு இருந்தார். அதற்குப் பிறகு  பார்வதி வெளியில் தலை காட்டவில்லை. 

ஆனாலும்   பராசக்தி படத்திற்கு பார்வதி அவருடைய    தாயார் மற்றும் தோழியுடன் சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது . தற்போது சாண்ட்ராவின் சுயரூபம் பலருக்கும் தெரிந்த நிலையில்  பார்வதிக்கு தொடர்ந்து  ஆதரவு குரல் ஒலித்து வருகிறது. 

இந்த நிலையில்,  பிக் பாஸ் டீம் தரப்பில் பார்வதிக்கும் கமருதீனுக்கும் பைனலுக்கு இன்வைட்  செய்யப்பட்டுள்ளதாம். ஆனாலும் இதனை கமரூதீன் ஏற்றுக் கொண்டாலும் பார்வதி ரிஜெக்ட் செய்ததாக கூறப்படுகிறது. 


Advertisement

Advertisement