தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் சூர்யா, தனது அடுத்த திரைப்படமான ‘கருப்பு’ மூலம் திரை ரசிகர்களை கவர தயாராக இருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகும் இந்த படம், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவருகிறது. இப்படத்தில் சூர்யா நடித்திருப்பது மட்டும் அல்லாமல், கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். இதனால், ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அத்துடன், இத்திரைப்படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்கள் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தின் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி சமீபத்தில் தனது சமூக வலைத்தளங்களில் ஒரு அப்டேட் பகிர்ந்துள்ளார்.
அவர் அதில், "சூர்யாவின் ரசிகர்கள் கருப்பு படத்தின் அப்டேட்டுக்காக வெயிட் பண்றீங்க. இன்னைக்கு என்ன நல்ல செய்தின்னா, பொங்கல் நல்வாழ்த்துக்கள் என போஸ்ட் போட்டு எதுவும் வராது. தீபாவளி, ரம்ஜான், சுதந்திரதினம், குடியரசு தினம் என 473 போஸ்டர்கள் விட்டுட்டோம். இன்னைக்கு எந்த போஸ்டரும் கிடையாது. இன்னொரு நல்ல செய்தி அடுத்து வரப்போற, செகண்ட் சிங்கிள் கூட அந்த செய்தி வரும்." என்று கூறியுள்ளார்.
பாலாஜி கூறிய இந்த அப்டேட், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அளித்து, கருப்பு திரைப்படத்தின் வரவிற்கு உற்சாகத்தை அதிகரித்துள்ளது.
Listen News!