தமிழ் சினிமாவின் பல பரிமாணங்களில் தன்னை நிரூபித்து வரும் விஜய் ஆண்டனி மீண்டும் ஒரு புதிய முயற்சியுடன் திரையுலகில் வருகிறார். இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல வேறுபட்ட துறைகளில் தன்னை வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனதை கவர்ந்த விஜய் ஆண்டனி, தற்போது ‘பூக்கி’ என்ற புதிய திரைப்படத்தை தயாரிக்கிறார்.
இந்த திரைப்படத்தின் முக்கியத்துவம் மட்டும் இல்லாமல், படத்தின் கதைக்களமும் மிகவும் எதிர்பார்ப்பை எழுப்பி வருகிறது. ‘பூக்கி’ திரைப்படத்தில் விஜய் ஆண்டனியின் அக்கா மகன், சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவத்துடன், கதாநாயகனாக நடிக்கிறார் அஜய் தீசன்.

‘பூக்கி’ திரைப்படத்தை இயக்குகிறார்கள் கணேஷ் சந்திரா. கதாநாயகியாக தனுஷா நடித்துள்ளார். இப்படம், இரு தலைமுறை காதலர்களின் ரிலேஷன்ஷிப் பிரச்சினைகள் மற்றும் அவர்களிடையேயான நகைச்சுவையான சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘பூக்கி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரபூர்வமாக தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ள போஸ்டர் மற்றும் அறிவிப்பில், படம் வரும் பிப்ரவரி 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Listen News!