தமிழர்களின் பாரம்பரிய மரபுகளை நிலைப்படுத்தும் வகையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இதனை உலகளவில் வாழும் தமிழர்கள் மிகவும் உணர்வு பூர்வமாக கொண்டாடுவார்கள்.
இந்த நிலையில், மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத் துறை இணை மந்தரி எல். முருகன், தனது இல்லத்தில் பொங்கல் விழாவை கொண்டாடியுள்ளார். இதன்போது முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வது வழக்கமாக காணப்படுகிறது.
'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற நோக்கத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட இந்த விழாவில், தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்களும். பராசக்தி படக் குழுவினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

தற்போது இது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
மேலும் இந்த விழாவில் ரவி மோகன் தனது தோழி கெனிஷாவுடன் கலாச்சார உடையில் வருகை தந்துள்ளதும் வைரலாகிய உள்ளது.
Listen News!