மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத் துறை இணை அமைச்சர் எல். முருகன் தனது இல்லத்தில் பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாடியுள்ளார். இந்த விழாவில் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், சமூக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துள்ளனர்.
இந்த விழாவில், சமீபத்தில் வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்தின் படக்குழுவினரும் கலந்து கொண்டனர். நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த விழாவில் பங்கேற்றது கவனம் பெற்றது. விழாவுக்காக டெல்லி சென்றிருந்த போது, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சிவகார்த்திகேயன் அளித்த பதில்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயனிடம் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. குறிப்பாக, நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் மற்றும் சமீபத்திய அரசியல் சம்பவங்கள் குறித்து கேள்விகள் எழுந்தன.
இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், மிகவும் தெளிவான மற்றும் பொறுப்பான பதில்களை அளித்துள்ளார். அவரது இந்த பதில்கள் தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் விஜய் சமீப காலமாக அரசியல் களத்தில் தீவிரமாக இறங்கி வருவது அனைவரும் அறிந்த விஷயம். இது குறித்து செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், “விஜய் சாரின் அரசியல் பயணத்திற்கு ஏற்கனவே தனிப்பட்ட முறையிலும் சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்களைக் கூறி இருந்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும்," ஜனநாயகன் படம் விரைவில் வரும். அந்தப் படம் வந்தால் அது கொண்டாட்டம் தான். கரூர் சம்பவம் பற்றி நான் பேச விரும்பவில்லை." என்றார் சிவகார்த்திகேயன். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த வீடியோவை பகிர்ந்து, தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
Listen News!