தமிழ் சினிமா ரசிகர்கள் இன்று மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த திரைப்படம் ‘வா வாத்தியார்’ இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தில் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.
திரைப்படம் ரிலீஸ் ஆனது மட்டுமல்லாமல், சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் விமர்சனங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இப்படத்தின் கதை, நடிகர்களின் நடிப்பு என்பன பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

“வா வாத்தியார்” திரைப்படத்தில் கார்த்தி நடித்த கேரக்டர் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அவர் நடித்த பாத்திரம் ஒரு ஃபேண்டஸி வகையைச் சேர்ந்த கதையாக இருப்பதால், பார்வையாளர்களை கதையோடு நெருங்கி இணைக்கிறது.
திரைப்படத்தின் ஆரம்பத்திலே வரும் ஃப்ளாஷ்பேக் காட்சி பார்வையாளர்களுக்கு “அற்புதமாக உள்ளது” என்று விமர்சகர்கள் பகிர்ந்துள்ளனர். இதனால், படம் தொடங்கிய முதல் காட்சியிலிருந்தே திரையரங்கில் மக்கள் குவிந்துள்ளனர்.
இடைவேளையில் வரும் கார்த்தியின் என்ட்ரி காட்சி மிகவும் மாஸ் என ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர். இப்படத்தின் முதல் பாதி முழுவதும் சூப்பர் என்ற விமர்சனமும் வெளியாகி உள்ளது. கார்த்தியின் நடிப்பு மற்றும் ஸ்டைல் பார்வையாளர்களின் பாராட்டை பெற்றுள்ளது.
இயக்குநர் நலன் குமாரசாமி இப்படத்தை உருவாக்கிய விதம், அவரின் முன்னைய படங்களோடு வேறுபாடாக இருப்பதாகவும் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
Listen News!