• May 20 2024

பிக் பாஸில் தனது டேலண்டை காட்டிய கேமராமேன்! மாயா சொன்னதை எப்படி காட்டியுள்ளார் பாருங்க?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இன் டைட்டில் வின்னர் யார் என்பதை இன்னும் இரண்டு நாட்களில்  அறிந்து விடலாம். ஆனால் அது வரையில் டைட்டில் வின்னர் யார் என்பது தொடர்பில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியவாறே உள்ளது.

இந்த நிலையில், 'ஒரு ஹீரோ எப்படி இருக்க வேண்டும்' என்று பிக் பாஸ் வீட்டில் உள்ள மாயா, பூர்ணிமாவுடன் கதைத்துக் கொண்டு இருக்க, அதனை மிகவும் புத்திசாலித்தனமாக அர்ச்சனா பெயருள்ள இடத்தை சுட்டிக்காட்டி உள்ளார் கேமரா மேன். தற்போது குறித்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.


பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் பழைய போட்டியாளர்கள் வந்த நிலையில், பூர்ணிமாவும் மாயாவும் மீண்டும் கைகோர்த்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், பூர்ணிமாவும் மாயாவும் தனியாக பேசிக் கொண்டிருக்கும் போது, தனக்கு ஏன் ஓட்டு போட வேண்டும்? என்று மாயா புத்திசாலித்தனமாக பிரச்சாரம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். 


அதாவது, ஒரு திரைப்படம் என்றால் அதில் கண்டிப்பாக ஒரு ஹீரோ இருப்பார். அந்த ஹீரோ யாராக இருக்க வேண்டும் என்றால் ஒரு இம்பேக்ட் கிரியேட்டர் பண்றவராக இருக்க வேண்டும். எனக்கு ஓட்டு போட வேண்டும் என்று நான் சொல்லல ஆனா ஒரு ஹீரோவுக்கு ஓட்டு போடுங்க என்று தான் சொன்னேன். என்று பூர்ணிமா விட மாயா சொல்கிறார். அந்த நேரத்தில், அர்ச்சனா பேர் உள்ள ஒரு  பலகையை காண்பிக்கின்றது கேமரா.


இதில் என்ன ஹைலைட்  என்றால், 'நீங்கள் ஹீரோவுக்கு ஓட்டு போடுங்கள்' என்ற மாயா சொல்லும் போது கேமராமேன் அர்ச்சனாவின் பெயரை காண்பித்தது தான். தற்போது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.


Advertisement

Advertisement