• Jan 15 2026

அட்ராசக்க.! வெளியானது லோகேஷ் கனகராஜின் 23வது பட அப்டேட்.! என்ன தெரியுமா.?

subiththira / 23 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழும் லோகேஷ் கனகராஜ், தனது மாறுபட்ட கதைக்களங்களாலும், ஹாலிவுட் பாணி மேக்கிங்காலும் இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறார். குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு தனித்துவமான ஸ்டைலை உருவாக்கியுள்ள லோகேஷ், இன்று பான்-இந்தியா அளவில் பேசப்படும் இயக்குநராக மாறியுள்ளார்.


கடந்த சில மாதங்களாகவே, லோகேஷ் கனகராஜ் பான் இந்திய அளவில் பிரபலமான நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார் என்ற தகவல்கள் திரையுலகில் வலுவாக பேசப்பட்டு வந்தன. இந்த கூட்டணி உண்மையா? அல்லது வதந்தியா? என்ற சந்தேகம் ரசிகர்களிடையே நிலவியது.

இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் அப்டேட், அந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதாவது, இந்த ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


இந்த படம், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 23வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்,பல வெற்றிப் படங்களின் மூலம் தனித்துவமான முத்திரையை பதித்திருந்தார். இந்நிலையில், 23வது படமாக உருவாகும் இந்த படம், லோகேஷ் கனகராஜ் வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

அத்துடன், இந்தப் படத்திற்கு லோகேஷ் கனகராஜின் நெருங்கிய கூட்டாளியாக மாறியுள்ள இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement