• Jan 15 2026

பிக் பாஸில் லவ் ப்ரொபோஸ்; பாரு கிட்ட இதான் சொன்னேன்.? பிள்ளைகள் மீது சாண்ட்ரா சத்தியம்

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.   இந்த சீசனில் தற்போது பைனலிஸ்டாக சபரி, திவ்யா, விக்ரம் மற்றும் அரோரா ஆகிய நான்கு போட்டியாளர்கள் காணப்படுகின்றனர். 

தற்போது பிக் பாஸ் வீட்டிற்கு பழைய போட்டியாளர்கள் கெஸ்ட் ஆக வருகை தந்துள்ளனர். அந்த வகையில் இன்றைய தினம் வெளியான முதலாவது ப்ரோமோவில் சாண்ட்ரா என்ட்ரி கொடுக்கிறார். 

இதன்போது ஏற்கனவே உள்ளே இருந்த அவருடைய கணவர் பிரஜின் முன்னாடி  முட்டி போட்டு அமர்ந்து,  நீ எனக்கு எவ்வளவு இம்பார்டன்ட் என்பதை நான் இந்த 20 நாள்ல புரிந்து கொண்டேன்..  என்று சொன்னதும், கையில் இருந்த ரோசை வாங்கிக் கொண்டு சாண்ட்ராவை தூக்கி சுற்றுகின்றார் பிரஜின்.


அதற்கு பின்பு நேராக ரம்யாவிடம் சென்று, ரம்யா நீ பார்த்தது தப்பு..  நான் அந்த வார்த்தை சொல்லவே இல்லை என்று சாண்ட்ரா சொல்ல, என்கிட்ட வீடியோ இருக்கு என்று ரம்யா சொல்கின்றார்.

எனினும் என்னுடைய குழந்தைகள் மீது சத்தியம் என்று சாண்ட்ரா சொல்லவும், நீங்க பாம்பு என்று சொன்னதும். நம்பக் கூடாது என்று சொன்னதும்  உண்மைதான்.. அதற்கு வீடியோ நான் காட்டுகின்றேன் என்று ரம்யா சொல்ல, நான் சொல்லவில்லை என்று அங்கிருந்து செல்லுகின்றார் சாண்ட்ரா.

இதன் போது அங்கிருந்து அமீர், என்னை என்ன சொன்னாங்க தெரியுமா.? விடு..  என்று சாண்ட்ரா சொன்னதை  குறிப்பிடுகின்றார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.

Advertisement

Advertisement