• Jan 15 2026

வேறலெவல் எனர்ஜி.. ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க ஒர்கவுட் செய்யும் நடிகை சமந்தா.!

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் சமந்தா ரூத் பிரபு, தனது நடிப்பால் மட்டுமின்றி, தனிப்பட்ட வாழ்க்கையாலும் அடிக்கடி செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். 2010களின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வந்த சமந்தா, ரசிகர்களிடையே ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார்.

சமந்தா, 2017ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் மிகவும் பேசப்பட்ட நட்சத்திர ஜோடிகளில் ஒன்றாக இந்த திருமணம் அமைந்தது. ஆனால், சில ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2021ஆம் ஆண்டு இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் பிரிந்து கொண்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.


இந்த விவாகரத்திற்குப் பிறகு, நாக சைதன்யா தனது வாழ்க்கையில் புதிய பாதையைத் தேர்ந்தெடுத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால், சமந்தா தனியாகவே வாழ்ந்து, தனது கவனம் முழுவதையும் திரைப்படங்கள், உடல்நலம் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் செலுத்தி வந்தார். 

இந்நிலையில்,கடந்த சில மாதங்களாக சமந்தா குறித்து ஒரு புதிய செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. அதாவது, அவர் இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் காதல் உறவில் இருப்பதாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. ராஜ் நிடிமோரு, வெப் சீரிஸ்களின் மூலம் அறியப்பட்டவர் என்பதால், இந்த செய்தி அதிக கவனம் பெற்றது.

மேலும், கடந்த வருடம் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில், சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு திருமணம் செய்து கொண்டனர். 

இந்நிலையில், சமந்தா தீவிரமாக ஒர்க்கவுட் செய்யும் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அவர் ஜிம்-இல் முழு ஈடுபாட்டுடன் பயிற்சி செய்து வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

வீடியோவைப் பார்க்கும் ரசிகர்கள்,“இவ்வளவு சவால்களை கடந்து வந்த பிறகும் சமந்தா இவ்வளவு எனர்ஜெட்டிக்காக இருக்கிறார்” என்று பாராட்டி வருகின்றனர். 


Advertisement

Advertisement