• Jan 18 2025

மாலினி போய் இப்ப சில்பாவா? முறையாக சிக்கிய செழியன்! கோபிக்கு பாக்கியா கொடுத்த பதிலடி

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  ஜெனியை கூட்டிக்கொண்டு செழியன் ரெஸ்டாரன்ட் செல்கிறார். அங்கு அவரை மகிழ்விக்கும் வகையில் ஜெனிக்கு சாப்பாடு ஊட்டி விட்டு அவருக்கு பிடித்த உணவுகளை ஓடர் பண்ணி என்ஜாய் பண்ணுகிறார். அந்த நேரத்தில் செழியனுடன் வேலை பார்த்த சில்பா என்ற பெண் ஒருவர் அவர்களுடன் வந்து ஜாயின் பண்ணுகிறார்.

அவர் செழியனை பார்த்துவிட்டு பேச செழியன் இதுதான் என் வைஃப் ஜெனி என்றும் ஜெனியிடம் இது என்னோட வொர்க் பண்றவங்க பெயர் சில்பா என்றும் அறிமுகம் செய்து வைக்கின்றார். இறுதியாக அவர் போகும்போது செழியனை  பார்த்து இன்று ரொம்ப கேன்சமா இருக்கீங்க என்று சொல்ல, செழியனும் நீங்க ரொம்ப ப்ரிடியா இருக்கீங்க என்று சொல்ல, ஜெனி பார்த்து கோபப்படுகிறார். இதைத் தொடர்ந்து செழியனிடம் கேள்வி மேல் கேள்வியாக கேட்கிறார்.


மறுபக்கம் பாக்கியாவும் ராமமூர்த்தியும் வாக்கிங் போக, எதிரே கோபி வருகிறார். ராமமூர்த்தி தனக்கு தெரிந்தவரிடம் பேச சென்ற நேரத்தில், கோபி பாக்கியாவிடம் அந்த வீட்டில் ஒரே சண்டையா இருக்கு அம்மாவா வந்து அழைத்துப் போகுமாறு சொல்கிறார். அதற்கு பாக்கியா முடியாது உங்க பிரச்சனை நீங்க தான் பாக்கணும் என்று பதிலடி கொடுக்கிறார்.

இதை தொடர்ந்து செழியன் ஆபீசுக்கு வெளிக்கிட ஜெனி நின்று  பார்த்துக் கொண்டிருக்கின்றார். ஆபீசுக்கு தான் போறியா என்று கேட்க, நான் க்ளைன்ட் ஒருவரை பார்த்துட்டு அப்படியே ஆஃபீஸ்க்கு போவேன் என்று சொல்ல, அப்படி என்றால் லைவ் லொகேஷன் அனுப்பு என்று சொல்கிறார். உடனே அனுப்புமாறு சொல்ல செழியன் உடனே அனுப்பி வைத்துவிட்டு அப்செட் ஆகி வந்து ஹாலில் இருக்கிறார். இதன் போது பாக்கியா என்ன நடந்தது? ஏன் ஒரு மாதிரி இருக்கா என்று கேட்கிறார் இதுதான் இன்றைய  எபிசோட்.

Advertisement

Advertisement