• Nov 21 2024

அட்லி - ப்ரியாவின் படுக்கையறை புகைப்படம்: ரசித்து கமெண்ட் போட்ட சமந்தா..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் அட்லி மற்றும் அவருடைய மனைவி ப்ரியா அட்லி ஆகிய இருவரும் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பதும் அவ்வப்போது இருவரும் பதிவு செய்யும் ரொமான்ஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும் என்பது தெரிந்தது.

அந்த வகையில் ப்ரியா அட்லி சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்லி உடன் படுக்கையில் படுத்திருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு  சினிமா பிரபலங்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

குறிப்பாக நடிகை சமந்தா இந்த புகைப்படத்திற்கு ’வாவ்’ என்று கமெண்ட் பதிவு செய்து லைக்கையும் தட்டி விட்டுள்ளார். மேலும் ப்ரியா அட்லி  இந்த பதிவுக்கு சில குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே கமெண்ட் செய்யும் வகையில் லாக் செய்துள்ளதை அடுத்து தேவையில்லாத கமெண்ட்ஸ் தவிர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இந்த புகைப்படத்தை ஸ்கிரீன்ஷாட் எடுத்து மற்ற சமூக வலைதளங்களில் பதிவு செய்து வரும் ரசிகர்கள் படுக்கையறையில் கணவனுடன் இருப்பது என்பது தனிப்பட்ட ஒரு நிகழ்வு என்றும் அதை போய் புகைப்படம் எடுத்து பொதுவெளியில் பதிவு செய்வது அநாகரிகமானது என்றும் கூறி வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் ஜாலியாக பதிவு செய்யப்பட்ட ஒரு பதிவுக்கு இவ்வளவு ஆக்ரோஷமான கமெண்ட்ஸ் தேவையில்லை என்று அட்லி ஆதரவாளர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். மொத்தத்தில் ப்ரியா அட்லியின்  இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement