'பிக்பாஸ் தமிழ் சீசன் 9' நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக ஆரம்பமானது. இந்த முறையும் விஜய் சேதுபதி தான் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த சீசனில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், விஜே பார்வதி, பலூன் அக்கா என அழைக்கப்படும் அரோரா, குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனி, இயக்குனர் பிரவீன் காந்த், சீரியல் நடிகர்கள் சபரி மற்றும் கம்ருதீன், இன்ஸ்டா பிரபலங்களான ரம்யா ஜோ மற்றும் சுபிக்ஷா, துஷார் , கானா வினோத், அகோரி கலையரசன், ஆர்ஜே கெமி மற்றும் நந்தினி, ஸ்டாண்ட் அப் காமெடியன் விக்கல்ஸ் விக்ரம், திருநங்கை அப்சரா, சீரியல் நடிகை ஆதிரை, மாடல் அழகியான வியானா உள்பட 20 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.
இந்த நிலையில், 'பிக்பாஸ் தமிழ் சீசன் 9' நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகருடன் மொத்த ஹவுஸ்மேட்ஸும் எகிறுகின்றனர். முதலில் பிரவீனும் திவாகரனும் குரட்டை விட்டதாக மாறி மாறி வாக்குவாதம் பண்ணுகின்றனர்.
இதற்கு இடையில் கெமி குறுக்கிட்டு நீங்க கத்த வேணாம் சார் என திவாகருக்கு சொல்லுகிறார். இதனால் நீ யாருமா அத சொல்ல என திவாகர் கேட்க, நான் கெமி என்கிறார்.
அதற்கு நான் வாட்டர் மெலன் ஸ்டார் என்று திவாகர் சொல்ல, நீங்க என்ன ஸ்டாரா வேண்டும் என்டாலும் இருங்க ஆனா கத்த வேண்டாம் என சொல்லுகிறார்.
இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ. ஆகவே மொத்த ஹவுஸ்மேட்ஸும் தற்போது திவாகரை வைத்து செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!