தமிழ் சினிமாவில் நடிப்பு, இயக்கம், திரைக்கதை எழுதுவது, பாடல் பாடுவது என பன்முகத்திறமை அடையாளமாக திகழ்பவர் கமல்ஹாசன். இவர் தனது திரைப்பயணத்தில் பல புதிய சாதனைகளை படைத்து வருகின்றார்.
கடந்த காலங்களில் நடைபெற்ற அல்பர்ட்டா இந்திய திரைப்பட விழா 2025 நிகழ்ச்சியில், முதன்முறையாக வழங்கப்படும் 'கோல்டன் பீவர் அவார்ட்' (Golden Beaver Award) என்ற உயரிய விருது கமல்ஹாசனுக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது
தேசிய விருதுகள், பிலிம்ஃபேர் விருதுகள் எனப் பல விருதுகளைக் குவித்துள்ள கமல்ஹாசன், 2014 ஆம் ஆண்டு இந்திய அரசால் பத்ம பூஷன் விருதையும் பெற்றவர்.
கரூரில் விஜய் மேற்கொண்ட பரப்புரையில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். தற்போது அவர்களின் குடும்பத்தினரை பார்ப்பதற்காக இன்றைய தினம் கமலஹாசன் கரூருக்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில், கமல்ஹாசன் ஏர்போர்ட் செல்லும்போது அங்கு பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்வியினால் கடுப்பாகி உள்ளார்.
அதாவது கமல்ஹாசன் அவசரமாக சென்று கொண்டு இருக்கும் நிலையில் அவரை சுற்றி வளைத்த பத்திரிக்கையாளர்கள் அவரிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பினர். ஆனாலும் அவர் சாரி சாரி என சொல்லிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Listen News!