• Jan 19 2025

என் நிலைமை என் மகனுக்கு வரக்கூடாதுன்னு நினைச்சேன்: ஜோதிலட்சுமி மகள் ஜோதிமீனா..~!

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

பிரபல கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமியின் மகள் ஜோதி மீனா ’எனக்கு வந்த நிலைமை என் மகனுக்கு வரக்கூடாது என்று நினைத்ததால் தான் சினிமாவில் இருந்து விலகினேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

கடந்த 80களில் கவர்ச்சி நடனமாடும் நடிகையாக இருந்தவர் ஜோதிலட்சுமி. இவரது மகள் ஜோதி மீனாவும் 17 வயதிலேயே கவர்ச்சி நடனமாட வந்து விட்டார். சரத்குமார், நக்மா நடித்த ’ரகசிய போலீஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர், அதன்பிறகு பல படங்களில் நடனம் ஆடுவது மட்டுமின்றி குணச்சித்திர கேரக்டர்களில் நடித்தார்.

விஜயகாந்த் நடித்த திருமூர்த்தி, பிரபு நடித்த மெட்ராஸ், சரத்குமார் நடித்த பரம்பரை, கார்த்தி நடித்த உள்ளத்தை அள்ளித்தா, பாண்டியராஜன் நடித்த கோபாலா கோபாலா உள்பட பல வெற்றி படங்களில் இவர் நடித்துள்ளார்.



இந்த நிலையில் தான் இவர் ஒருவரை காதலித்த நிலையில் அவரையே திருமணம் செய்ய முடிவெடுத்தார். இவருடைய திருமணத்திற்கு இருதரப்பிலும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பெற்றோர் எதிர்ப்பை மீறி தான் ஜோதிமீனா தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதன் பிறகு ஜோதிலட்சுமி தனது மகளையும் மருமகனையும் ஏற்றுக் கொண்டதை அடுத்து இருவரும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தினர்.

இந்த நிலையில் மகன் பிறந்த பிறகு ஜோதி மீனா சினிமாவில் இருந்து விலகி விட்டார். ஜோதிமணி சிறு குழந்தையாக இருக்கும்போது ஜோதிலட்சுமி சினிமாவில் பிஸியாக இருந்ததால் அவரை கவனித்ததே இல்லை. இந்த நிலைமை என் மகனுக்கு வரக்கூடாது என்பதற்காக தான் நான் சினிமாவில் இருந்து விலகினேன். இப்போது என் மகன் டாக்டர் ஆகி உள்ளார், கணவரும் பிசியாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார், இருவரும் காலை சென்றால் இரவில் தான் வீடு வருவார்கள் என்பதால் தான் தற்போது நான் என் வயதுக்கேற்ற கேரக்டரை ஏற்று நடித்து வருகிறேன்’ என்று ஜோதிமீனா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement