தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்கள், வித்தியாசமான இயக்கத் திறன் கொண்ட இயக்குநர்களில் ஒருவராக அறியப்படும் பா.ரஞ்சித், தற்பொழுது ‘சிறை’ திரைப்படத்தின் முன்னோட்ட விழாவில் தனது எண்ணங்களை பகிர்ந்தார்.
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம், 2025 டிசம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் இயக்கத்தை சுரேஷ் ராஜகுமாரி மேற்கொண்டு, நாயகியாக அனந்தா நடித்துள்ளார். அந்தவகையில், விக்ரம் பிரபு, அனந்தாவின் திறமையான நடிப்பு மற்றும் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்பட காட்சிகள், ரசிகர்களுக்கு ஒரு தனித்துவமான மற்றும் உணர்ச்சிபூர்வமான திரையரங்க அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், முன்னோட்ட விழாவில் பங்கேற்ற பா.ரஞ்சித் தனது கருத்துகளை தெளிவாக வெளிப்படுத்தினார். நிகழ்ச்சியில், பா.ரஞ்சித், “நம்மள பிடிக்குதோ, இல்லையோ.. பிரச்சினையை பேசித்தான் ஆகணும்.
அந்தப் பிரச்சனை சமூகநலம் சார்ந்த பிரச்சனையாக இருக்க வேண்டும். இல்லனா என்னை முதல் படத்திலேயே அனுப்பி இருப்பாங்க.” என்றார். இந்தக் கருத்து தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!