• Feb 27 2026

விஜய்க்கு மலேசியா அரசு விதித்த நிபந்தனை.. என்ன தெரியுமா.? முழுவிபரம் இதோ.!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் விஜய், அவரது இறுதி திரைப்படமான “ஜனநாயகன்” மூலம் திரை ரசிகர்களை மீண்டும் கவர உள்ளார். ஹெச். வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகிய இந்த படம், அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


 “ஜனநாயகன்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில், டிசம்பர் 27, 2025 அன்று நடக்க இருக்கிறது. இந்த விழா, உலக அளவில் விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தையும், மீடியா கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.


இந்த நிலையில், வலைப்பேச்சு அந்தணன் சமூக வலைத்தளங்களில் சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி, மலேசியா அரசாங்கம் விழா நடைபெறும் போது விஜய் அரசியல் கருத்துகளை பேசக்கூடாது என்று முன்கூட்டியே அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளன. 

Advertisement

Advertisement