துல்கர் சல்மான் தயாரிப்பில், கல்யாணி பிரியதர்ஷன், சாண்டி நஸ்லென் உள்ளிட்ட பலர் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் லோகா. இந்த படம் இன்னும் ஓடிடியில் வெளியாகவில்லை.
லோகா படத்தின் ரிலீஸுக்கு பின்பு சிவகார்த்திகேயனின் மதராஸி, காந்தி கண்ணாடி உள்ளிட்ட தமிழ் படங்களும் ஓடிடியில் வெளியாகி விட்டன. ஆனால் லோகா திரைப்படம் நல்லபடியாக ஓடுவதால் எதற்காக ஓடிடியில் வெளியிட வேண்டும் என துல்கர் சல்மான் மறுத்துள்ளார்.
இந்த நிலையில், லோகா திரைப்படம் தீபாவளி ஸ்பெஷல் ஆக ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி லோகா திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் 20ஆம் தேதி ஜியோ ஹோஸ்டர் ஓடிடி தளத்தில் தீபாவளி ட்ரீட்டாக வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் இது தொடர்பில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை .
இந்திய அளவில் பெண் கதாபாத்திரம் முன்னணி ரோலில் நடித்து, முதல் முறையாக 300 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த படமாக லோகா படம் பிரபலம் அடைந்தது.
இதன் அடுத்த பாகத்தில் லீடு ரோலில் டொவினோ தாமஸ் நடித்து அசத்த காத்திருக்கிறார். துல்கர் சல்மானும் இந்த சீரிஸில் மிகப்பெரிய கதாபாத்திரத்தில் களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Listen News!