• Oct 08 2025

பான் இந்திய பிரபாஸ்.. சூப்பர் ஸ்டார் ஆனது இப்படித்தானா.?

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

பான் இந்திய அளவில் வெளியாகி  மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் தான் பாகுபலி. இந்த படத்தை இயக்குநர் எஸ் ராஜமவுலி இயக்க,  நடிகர்கள் பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, சத்யராஜ்  முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

கடந்த 2015 ஆம் ஆண்டு  திரைக்கு வந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு,  வசூல் ரீதியாகவும் இந்திய சினிமாவின் தரத்தையும் உயர்த்தியது. 

இந்த படத்தின் முதலாவது பாகத்தில் கட்டப்பா எதற்காக பாகுபலியை கொன்றார்? என்ற  கட்டத்துடன்  முடிக்கப்பட்ட இந்த படம் பார்வையாளர்களை யோசிக்க செய்தது.  இதனால் அதன் இரண்டாம் பாகமும் 1800 கோடி வரை வசூலை வாரிகுவித்து மாபெரும் வெற்றி பெற்றது. 


இந்த படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.  இதனால் பாகுபலி 1&2 பாகங்களை இணைத்து  பாகுபலி தி எபிக் பெயரில் எதிர்வரும் அக்டோபர் 31ஆம் தேதி மறு வெளியிட செய்ய திட்டமிட்டுள்ளனர். 

இந்த நிலையில், பிரபாஸ் பற்றி  தயாரிப்பாளர் ஷோபு யார்லகடா  கூறுகையில்,  பிரபாஸ் நடிகர் அல்ல.. அவர் அர்ப்பணிப்பின் சின்னம்.. பாகுபாலி படத்திற்காக நான்கு ஆண்டுகள் முழுமையாக செலவழித்தார்.

பாகுபலி படத்தின் முதலாம் பாகம், இரண்டாம் பாகம் நடுவே வேறு படம் செய்ய வாய்ப்புகள் வந்த போதும் இல்லை  நான்  பாகம் இரண்டுக்காக காத்திருப்பேன் என்றார். அந்த நம்பிக்கையும் முயற்சியும் தான் அவரை இந்தியா முழுக்க சூப்பர் ஸ்டார் ஆக்கியது  என்றார். 



 

Advertisement

Advertisement