• Jul 12 2025

ரெடியானது ‘3 BHK’ படத்தின் இரண்டாவது பாடல்... – வெளியீட்டுத் தேதி எப்போது தெரியுமா?

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பரவலாக பேசப்பட்டுவரும் ஒரு புதிய படம் தான் ‘3 BHK’. குடும்பம், காதல் மற்றும் வாழ்க்கை யதார்த்தங்களை நேர்த்தியான கதைக்களத்துடன் நம்முன் கொண்டு வர தயாராக உள்ள இந்த திரைப்படம், தற்போது தனது இசை வெளியீட்டு கட்டத்தில் நகர்ந்து வருகின்றது. இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘இடி மழை’ நாளை (ஜூன் 21, 2025) வெளியாகவுள்ளதாக தற்பொழுது படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


‘3 BHK’ என்பது, ஒரு சாமானிய குடும்பத்தின் வாழ்வியல் அமைப்பை மையமாக கொண்டு நகரும் திரைப்படம். இயக்குநர் ஸ்ரீ கணேஷ், தனது முன்னைய படங்களைப் போலவே, இந்த படத்திலும் மனதை தொடும் மனித உணர்வுகளை மிக நுணுக்கமாகக் காட்சிப்படுத்தி உள்ளார்.

இப்படத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இரண்டாவது பாடலாக வெளிவர இருக்கும் ‘இடி மழை’ பாடல், திரைப்படத்தில் முக்கியமான பயணத் தொடரில் ஏற்படும் நெருக்கம், காதலின் மென்மை போன்றவற்றை நினைவுபடுத்தும் வகையில் இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.


‘3 BHK’ படத்தின் முதல் பாடலான "கனவெல்லாம்.." வெளியான சில நாட்களிலேயே 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாவது பாடலான “இடி மழை” எவ்வாறு ரசிகர்களை கைப்பற்றப் போகிறது என்பதை எல்லோரும் ஆவலுடன் எதிர்நோக்கின்றனர்.

Advertisement

Advertisement