தமிழ் வெப் தொடர்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகர் அஸ்வின் குமார், சமீபத்தில் ஊடகங்களுக்கு ஒரு உணர்ச்சி பூர்வமான பேட்டி அளித்துள்ளார். குறிப்பாக, அவர் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பெரும் ரசிகர் வரவேற்பைப் பெற்றார், அதன்பின்னர் வெப் சீரிஸ்களிலும் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

இவர், "என்ன சொல்லப் போகிறாய்" என்ற பட நிகழ்ச்சியில் பேசிய போது ‘நிறைய பேர் கதை சொல்ல வறாங்க. அதுல 40 கதைகளை கேட்டு தூங்கிட்டேன்...' எனப் பேசியிருந்தார். இதற்கு பல மீம்ஸ்கள் எழுந்தன.
இந்நிலையில் சமீபத்தில் ஊடகத்தின் முன் பேசும் போது அஸ்வின், “அன்னைக்கு நான் மேடையில பேசுனதுக்கு இந்த மீடியால என்னவெல்லாம் பேசினாங்க.. எப்படியெல்லாம் ட்ரோல் செஞ்சாங்க.. அப்படி நான் என்ன தப்பு பண்ணேன். நான் பேசினது யாரையாவது காயப்படுத்தி இருந்தா நானே மன்னிப்பு கேட்டிருப்பேன். என்கிட்ட இழக்க ஒன்னுமே இல்ல.” என்று கூறியுள்ளார்.

இந்தப் பேட்டி, அவர் சமூக வலைத்தளங்களில் எதிர்கொண்ட விமர்சனங்களையும், ட்ரோலிங் அனுபவங்களையும் நேர்மையாக வெளிப்படுத்துகிறது. ரசிகர்களையும், மீடியாவையும் சந்திக்கும் போது ஏற்பட்ட மனநிலைகளை வெளிப்படுத்திய, அவரது உணர்ச்சி நிலை நேர்மையான பார்வையை அளிக்கின்றது.
Listen News!