விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான புதிய கதை களத்துடன் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதன்படி சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதை விரிவாக பார்ப்போம்.
ஏற்கனவே ஜீவா விஜயா வீட்டுக்கு வந்து தான் 30 லட்சத்தை வட்டியுடன் கொடுத்து விட்டேன். அந்த பணத்தை வைத்து தான் இவர்கள் ஷோரூம் ஆரம்பித்தார்கள் என்ற உண்மையை போட்டு உடைக்க, உண்மையை மறைத்த காரணத்திற்காக ரோகினிக்கு சரமாரியாக அடிகின்றார் விஜயா.
இதை தொடர்ந்து மனோஜையும் ரோகிணியையும் பிரித்து வைத்ததோடு ரோகிணி மன்னிப்பு கேட்கவும், அவருக்கு மன்னிப்பு வழங்கவில்லை. தற்போது ரோகிணிக்கு எமனாக காணப்படுகின்றார் விஜயா.
d_i_a
இந்த நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவில் மனோஜ் ரோகிணியின் ரூம் கதவை தட்ட அவர் கதவை திறக்கவில்லை. இதனால் பதறிய மனோஜ் விஜயாவை கூப்பிட்டு ரோகிணி கதவை தட்ட தட்ட திறக்கவில்லை என சொல்லுகின்றார்.
இதனால் விஜயா ரோகிணியை தட்டி அழைக்க அவர் கதவை திறக்கின்றார். இதன் போது நாங்க வெளியில் இருந்து கத்தி கொண்டு இருக்கின்றோம்.. நீ ஆடி அசைந்து வாரியா? என்று சத்தம் போடுகிறார்.
இதன்போது தான் தூங்கிவிட்டதாக ரோகிணி சொல்லுகின்றார். மேலும் மனோஜை ரெடியாகி விட்டு கடைக்கு போகுமாறு சொல்ல, ரோகிணி கதவை பூட்ட முற்படுகின்றார். ஆனால் கதவு இனி திறந்தே இருக்கட்டும் என கண்டிஷன் போடுகிறார் விஜயா.
இறுதியில் எல்லோரும் ஒன்றாக இருந்து சாப்பிட்டு கொண்டு இருக்க, ரோகிணியை சாப்பிட வருமாறு ஸ்ருதி கூப்பிடுகின்றார். ரோகிணியும் சாப்பிடுவதற்காக அமர, அவரை எழுந்து போகுமாறு விஜயா சொல்லுகின்றார்.
ஆனாலும் ரவி, நீங்க இருந்து சாப்பிடுங்க அண்ணி என்று சொல்ல, நான் அத்தை சொல்லும்போதே சாப்பிடுகின்றேன் என்று நிற்கின்றார் ரோகிணி. இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ..
Listen News!