பிரபல நடிகர் சிம்பு சமீபகாலமாக நினைத்த அளவு பட வாய்ப்புகள் இல்லாமையினால் மிகவும் கவலையில் இருந்தார். இவரது பிறந்த நாளினை முன்னிட்டு நடிக்கவுள்ள படங்களின் லைன் அப்டேட் போஸ்ட்டர்கள் வெளியாகியமையினால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
சிம்பு அதிக சம்பளம் கேட்டமையினால் அநேகமான இயக்குநர்கள் விலகி சென்றனர். இந்நிலையில் சிம்பு தொடர்ந்து தனது 49,50,51 ஆவது படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். இது குறித்த பல அப்டேட்டுகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.
தற்போது சிம்புவின் 49 ஆவது படத்தில் இசையமைப்பதற்கு அனிருத்திடம் கேட்டபோது அவர் மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அனிருத் தான் மிகவும் பிசியாக இருப்பதாக கூறியுள்ளார். அதன் பின்னர் சிம்புவின் 51 ஆவது படமாகிய அஷ்வத் மாரிமுத்து படத்தில் இசையமைப்பீங்களா என கேட்டதற்கும் இல்லை என கூறி மழுப்பியதால் சிம்பு அப்செட் ஆகியுள்ளதாக அவர் தரப்பு வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் இந்த இரண்டு படத்திற்கும் தற்போது முன்னணியில் இருக்கும் album songs பிரபலம் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றும் இவர் சூர்யா 45 படத்திற்கும் இசையமைத்து வருவதாகவும் தொடர்ந்து பல படங்களில் இசையமைப்பதற்கு கமிட்டாகி வேலைகளை சிறப்பாக செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
Listen News!