• Dec 02 2024

அழகாக ஆசைப்பட்டு ஆப்ரேஷன் செய்த ஸ்ரீகாந்த் பட ஹீரோயின்! அமெரிக்காவில் உயிரைவிட்ட பரிதாபம்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிககைகளாக வலம் வரும் நடிகைகளில் சிலர், தமக்கு மேலும் அழகு சேர்க்க பல்வேறு சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இவ்வாறு ஒரு சில நடிகைகளுக்கு மேற்கொள்ளப்படும் சத்திர சிகிச்சை, அவர்கள் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் சாதகமாக அமைந்தாலும், ஒரு சில நடிகைகளுக்கு அவர்களது வாழ்க்கையே புரட்டிப் போடும் வகையில் விபரீத சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.

அதன்படி, பார்ப்பதற்கு மிகவும் அழகாக, ரொம்ப க்யூட் ஆகவும் நடித்து வந்த நடிகை ஒருவர், மேலும் அழகாக வேண்டும் என்ற ஆசையில் உயிரையே விட்டுள்ளார்.  


குறித்த நடிகை, தெலுங்கு படங்களில் முன்னணி ஹீரோகளுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பை பெற்றார். பிறகு தமிழில் அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்தார்.

அந்த வகையில், ஸ்ரீகாந்த் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த பம்பரக் கண்ணாலே படத்தில் பூஜா கதாபாத்திரத்தில் நடித்த ஆர்த்தி அகர்வால் தான் அவ்வாறு உயிரை விட்ட நடிகை.


அதாவது, தனக்கு படவாய்ப்புகள் குறையவே இன்னும் அழகு சேர்க்க வேண்டும் என்பதற்காக விபரீத முடிவை எடுக்க ஆரம்பித்தார். அத்தோடு அவருக்கு பிரச்சனையும் ஆரம்பித்துள்ளது.

குறித்த நடிகை பார்ப்பதற்கு கொஞ்சம் குண்டாக இருக்க, தனது உடம்பை குறைக்க மருந்து மாத்திரைகள் எடுத்துள்ளார். ஆனால் இதன் மூலம் இவருக்கு ஆஸ்துமா நோய் ஏற்பட்டுள்ளது.


பல வருடங்களாக இந்த நோயால் பாதிக்கப்பட்ட பிறகு உயர் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு செல்ல, அங்கு சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டு மூச்சு திணறல் வந்ததால் திடீரென்று மாரடைப்பால் 31 வது வயதில் இறந்து போய்விட்டார்.

இவ்வாறு பட வாய்ப்புக்காக தனது உருவத்தை மாற்ற நினைத்த நடிகை ஆர்த்தி அகர்வால், இறுதியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேவேளை, தற்போது சில நடிகைகள் பட வாய்ப்புக்கு ஆசைப்பட்டு, ஆப்ரேஷன் செய்து தமது உடல் தோற்றங்களை மாற்றி வருகிறார்கள். ஆனால் அதனால் ஏற்படும் விபரீதத்திற்கு இவருடைய சம்பவமே ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement