சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான ‘பராசக்தி’ திரைப்படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி தற்போது வரையில் ஓடிக் கொண்டு உள்ளது.
சுமார் 150 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் இப்படம், வெளியான முதல் இரண்டு நாட்களில் நல்ல தொடக்க வசூலைப் பெற்றிருந்தாலும், அதன் பின்னர் பாக்ஸ் ஆபீஸில் எதிர்பார்த்த அளவிலான வசூல் பதிவாகவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், பராசக்தி திரைப்படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா சமீபத்தில் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி கவனம் பெற்றுள்ளது.
அந்த பேட்டியில், ஒரு படம் அதன் இலக்கை அடைய படக்குழுவாக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் இருக்கு. இன்றைய மார்க்கெட்டிங் சூழலில் படம் வெளியானால் மட்டும் போதாது.

படத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் சில தவறான விமர்சனங்களும், அவதூறு வகை கருத்துகளும் பரப்பப்படுவதாக அவர் கூறினார். இத்தகைய பதிவுகள் பெரும்பாலும் போலியான கணக்குகளின் மூலம் வெளியிடப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஒரு படத்திற்கு எதிராக தெரியாத ஐடிகளுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு மோசமான வகையில் அவதூறு பரப்புகின்றார்கள். நாம் இதனை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
அது எங்கிருந்து வருகின்றது என்பது உங்களுக்கு தெரியும். இந்த வகையான தாக்குதல் அரசியல் சார்ந்தவை அல்ல. இது படம் வெளியிடப்படாத நடிகரின் ரசிகர்களிடம் இருந்து வருகிறது. இந்த ரவுடித்தனத்திற்கு எதிராக நாம் போராடுகின்றோம் என்றார்.
இந்த பேட்டியைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பரவி வருகின்றன. சிலர் சுதா கொங்கராவின் கருத்துகளை ஆதரித்தும், சிலர் விமர்சித்தும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
Listen News!