• Apr 23 2025

பஹல்காம் தாக்குதலுக்கு எதிராகக் குரல் கொடுத்த தெலுங்கு நடிகர்..! நடந்தது என்ன..?

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இயற்கை அழகில் பெயர் பெற்ற பஹல்காம் இடத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 21ம் திகதி பாரிய இரத்த வெள்ளச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. குறிப்பாக, பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 26 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நாடெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

'மினி சுவிஸர்லாந்து' என அழைக்கப்படும் பேசாரான் புல்வெளி, சுற்றுலாப் பயணிகளுக்கு மிகச் சிறந்த பொழுதுபோக்கு இடமாக இருந்தது. குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தினசரி நூற்றுக்கணக்கானோர் அங்கு வருகை தந்து அவ்வியற்கை அழகை கண்டுகழித்தனர்.


ஏப்ரல் 21ம் திகதி, ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் பேசாரான் புல்வெளிக்கு நுழைந்து அங்கு பிக்னிக் வந்த பயணிகள் மற்றும் பொதுமக்களை நோக்கி நேரடியாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தினர். முன்னறிவிப்பு எதுவும் இல்லாத இந்த தாக்குதல், மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியது. 26 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதலுக்கு எதிராகப் பிரபலங்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் குரல் கொடுத்து வருகின்றார்கள். அவர்களில், தெலுங்கு திரைப்பட நடிகர் விஜய் தேவரகொண்டா, தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் இந்தத் தாக்குதலை கடுமையாக கண்டித்துக் கூறியுள்ளார்.

அதன்போது அவர் கூறியதாவது,“இந்தக் கோழைகள் விரைவில் அழிக்கப்படுவார்கள். ஒருபோதும் இந்தியா பயங்கரவாதத்திற்கு அடிபணியாது.” எனக் கூறியிருந்தார். விஜய் தேவரகொண்டா கூறிய இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பகிரப்பட்டு வருகின்றது.


Advertisement

Advertisement