• May 13 2025

கங்கை அமரன் சொன்னது முழுக்கப்பொய்!"குட் பேட் அக்லி" சர்ச்சைக்குப் பதிலடி கொடுத்த நடிகர்..!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற திரைப்படங்களைச் சுற்றிப் பல சர்ச்சைகள் உருவாகி வருகின்றன. குறிப்பாக சமீபத்தில் வெளியான "குட்பேட் அக்லி" திரைப்படம், வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றதோடு, இசை மற்றும் கதாநாயகனின் பங்களிப்பு குறித்த விவாதங்களும் எழுந்து கொண்டே வருகின்றன.

இந்த நிலையில், இளையராஜாவின் பாடல்களை வைத்துத்தான் இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கிறது என இசையமைப்பாளர் கங்கை அமரன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.


அதில் கங்கை அமரன் கூறியதாவது, “இளையராஜாவின் இசையால் 'குட்பேட் அக்லி' படம் இப்படி வசூலித்துள்ளது. அந்தப் பாடல் வந்தவுடனே தான் தியட்டரில கை தட்டி டான்ஸ் எல்லாம் பண்ணாங்க. அஜித் வந்தப்போ கூட அந்த அளவு சத்தமில்லை.” என்று கூறியிருந்தார்.

இந்தக் கருத்துகள் பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த கருத்துக்கு நடிகர் பிரேம் ஜி சமீபத்தில் நேரடியாகப் பதிலளித்துள்ளார். அதன்போது பிரேம் ஜி, “கங்கை அமரன் சொன்னது எல்லாம் சுத்தப் பொய். இந்தப் படம் ஓடியதற்கு காரணம் அஜித் தான்.!” என்று கூறியிருந்தார்.

மேலும், “இளையராஜா பாடல் சிறப்பாக இருந்தது தான். எனினும் அந்த ஒரு பாடலுக்கு மட்டும் தான் படம் ஓடியது என்று சொல்லுறத ஏற்றுக் கொள்ளவே முடியாது. படம் ஓடிதுக்கு அஜித்தின் பங்களிப்புத் தான் காரணம்." என்றார்.

Advertisement

Advertisement