• Jan 19 2025

வெய்ட்டராக வேலை செய்யும் விஜய் டிவி புகழ் பாலா... அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்... நடந்தது என்ன?

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி புகழ் பாலா ஹோட்டல் ஒன்றில் ஒரு நாள் முழுவதும்  வெய்ட்டர் போல வேலை செய்தது சமூகவலைத்தளங்களில் பரவலாக  பார்க்கப்பட்டு வருகிறது.


விஜய் டிவியில் கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் kpy பாலா. விஜய் டிவி நிகழ்ச்சிகளில் காமெடி செய்து ரசிகர்களை கவர்ந்தவர். ஒரு நேர உணவுக்கு கூட கஷ்டப்பட்ட பாலா ரசிகர்களுக்கு உயிர் ஊட்டும் வகையில் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார் .


அண்மையில் கூட இலவசமாக அம்புலன்ஸ் வாங்கி கொடுத்தார் . தற்போதைய இந்தியாவின் புயலால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார் . இவ்வாறான மனிதாபிமானம் கொண்ட பாலா தற்போது சென்னையில் உள்ள பிரபலமான உணவகத்தில் வெய்ட்டர் போல ஒரு நாள் வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார்.


இந்த சம்பவம் உணவருந்த வந்த பாலாவின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது .மிகவும் நகைச்சுவையாக கதைத்து  வெய்ட்டர் பணியை மிகவும் மகிழ்ச்சியாக செய்தார் மேலும் பல ரசிகர்களோடு புகைப்படங்களும் எடுத்து ரசிகர்களை தன்னுடைய இயல்பான நகைச்சுவையால் மகிழவைத்தார் .இந்த விடயம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement