• Jan 19 2025

பணம் கொடுத்து ரசிகர்களை திரட்டும் பிரபலங்கள் நடந்தது என்ன?...

Kamsi / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் நடிகை ப்ரியாமணி .  தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, தமிழ்  படங்களில்  ஒரு ரவுண்டு வந்த இவர் சினிமாத்துறையில் முண்ணனி நடிகையாக  புகழ்பெற்றார்.


தொடர்ந்து இவர் சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பருத்தி வீரன் திரைப்படம் தான். இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருதினையும் பெற்றார். பல வருடங்களுக்கு பிறகு  நடிகை ப்ரியாமணி ஜவான் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு  ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, ப்ரியாமணி நடித்த ஜவான் திரைப்படம் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் .


பெரிதும் பட வாய்ப்புகள் இல்லாத இவர் வெப் சீரியல்களில் நடித்து  வருகின்றார். இந் நிலையில் பேட்டி ஒன்றில் "paparazzi" பற்றிய கேள்விகளுக்கு நறுக்கு என்று பதில் கூறியுள்ளார் . அவர் பேட்டியில் கூறியதை பார்க்கலாம் வாருங்கள் , 

பாலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஏர்போர்ட் ,ஜிம் ,வாக்கிங் என எங்கு சென்றாலும் அவர்களை paparazzi கள் புகைப்படங்கள் எடுக்கிறார்கள் .என்னை ஏன் யாரும் புகைப்படம் எடுப்பதில்லை என என் நண்பரிடம் நான் கேட்ட போது என்னுடைய நண்பர் எனக்கு கூறியிருந்தார். நீ அதற்கு paparazziகளுக்கு பணம் கொடுக்க வேண்டும். அப்பிடி பணம் கொடுத்து தான் எல்லா பொது இடங்களிலும் நடிகர்கள் ,நடிகைகள் போனால் புகைப்படம் எடுக்கிறார்கள் .


உதாரணமாக ஒரு பிரபல நடிகையோ ,நடிகரோ வெளியே செல்லும் போது paparazziகளிடம் செல்லும் இடத்தையும் ,அவர்கள் கேட்கும் தொகையையும் கொடுக்க வேண்டும்.உண்மையாகவே எனக்கு இதை கேட்கும் போது ஆச்சரியமாக இருந்தது. இதை தவறு என்று நான் சொல்லவில்லை இருந்தாலும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்று கூறியுள்ளார் . 

Advertisement

Advertisement