• Jan 18 2025

என்னது திருமண கோலத்தில் சமந்தாவா? இல்லை அவரது அசலில் வேறு ஒரு பெண்ணா? வைரலாகும் புகைப்படம்!

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து எதற்குமே அஞ்சாத ஒரு சிங்கப் பெண்ணாக இன்றுவரை வாழ்ந்து வருகின்றார். 

சினிமா வாழ்க்கையிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி பல தோல்விகளைச் சந்தித்து இருக்கின்றார்.

இவர் தெலுங்கில் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் கடந்த  2010-ஆம் ஆண்டு வெளியான 'Ye Maaya Chesave' என்ற படத்தில் நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்த போது இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நெருங்கிய நட்பு பின்னர் காதலாக மாறியது. 


இதனைத் தொடர்ந்து சில வருடங்கள் டேட்டிங் செய்த இந்த ஜோடி கடந்த 2017 ஆம் ஆண்டு தங்களின் பெற்றோர் சம்மதத்துடன் பிரமாண்டமாக திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் இணைந்தனர். ஆனால் அதன் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துள்ளனர். 

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மையோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா , தற்போது அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் குஷி என்ற படத்தில் நடித்திருந்தார். 


இந்த நிலையில், நடிகை சமந்தாவை போலவே இருக்கும் பெண் ஒருவர், திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது.

அதாவது, சமந்தா தனது திருமணத்தில் எப்படி இருந்தாரோ, அதே போன்ற புடவை, மேக்கப் மற்றும் அணிகலன்களை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement