தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான தகவல் தற்போது திரைத்துறையில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அது வேறு ஒன்றுமில்லை இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் முதன்முறையாக கூட்டணியாக களமிறங்க உள்ளார்கள் என்பது தான்.!
இதற்கான Pre-production வேலைகள் தற்போது மிக வேகமாக நடைபெற்று வருவதாகவும், 2025 டிசம்பர் அல்லது ஜனவரி 2026 மாதங்களில் ஷூட்டிங் தொடங்கப்படவுள்ளதாகவும் தற்பொழுது இயக்குநர் வெங்கட் பிரபு உறுதிப்படுத்தியுள்ளார்.
இயக்குநர் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ஸ்டைலிஷான அடையாளம் கொண்டவர். சென்னை 600028, மங்காத்தா, மாநாடு போன்ற வெற்றிப் படங்களால், அவர் கதையமைப்பிலும், திருப்பங்களிலும் வித்தியாசங்களை ஏற்படுத்தும் இயக்குநராக பெயர் பெற்றிருந்தார்.
அண்மையில் இயக்கிய 'Custody' திரைப்படம் தமிழிலும், தெலுங்கிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அத்துடன் வெங்கட் பிரபு ரசிகர்கள் அவருடைய அசத்தலான ஸ்டைலில் படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையிலேயே சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி சேர்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
Listen News!