விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 9, கடந்த அக்டோபர் 5ஆம் தேதி துவங்கி, தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆரம்பம் முதலே ஒவ்வொரு போட்டியாளரின் தனிப்பட்ட வாழ்க்கை, சவால்கள், உணர்ச்சிகள், சிக்கல்கள் ஆகியவை வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அந்தவகையில், பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக உள்ள கலையரசன், தனது வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதியை மனம் திறந்து பகிர்ந்துள்ளார். அவர் பேசிய இந்த உரை ரசிகர்களை மட்டுமல்லாமல், சமூக வலைத்தளத்திலும் பரவலாக பேசப்படும் விசயமாக மாறியுள்ளது.
கலையரசன், பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய பயணத்தை பற்றி கூறும் போது, அவரது கடந்த கால வாழ்க்கையில் நடந்த துயரங்களை பகிர்ந்தார். "25 வயசில எல்லாத்தையும் பண்ணி தொலைச்சி, காசிக்கு போய் கருமத்தை கழிச்சு திரும்ப வந்துட்டேன். காசியோட அந்த அகோரி கலையரசன் இறந்துவிட்டார். அதனால அகோரி கலைன்னு சொல்லாதீங்க, இத மக்களுக்கும் சேர்த்து தான் சொல்லுறேன்... காசியிலேயே அந்த கலை ஜல சமாதி ஆகிட்டான்... இப்போ என் வயசு ஒன்னு, பிக்பாஸில இருந்து என் முதல் வயசு ஸ்டார்ட் ஆகுது..." என்று கூறியிருந்தார்.
அவருடைய இந்த உரை, வாழ்க்கையில் நடந்த உண்மையான தருணத்தை வெளிக்கொண்டு வரும் வகையில் அமைந்துள்ளது. இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!