தமிழ் சினிமா ரசிகர்களுக்காக ஒரு சுவாரஸ்யமான செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குநர் லிங்குசாமி, நடிகர் சூர்யா, நடிகை சமந்தா மற்றும் வில்லன் வித்யூத் உள்ளிட்டோர் இணைந்து 2014-ல் வெளியான "அஞ்சான்" திரைப்படம், விரைவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
படம் வெளியான போது ஏராளமான எதிர்பார்ப்புகள் இருந்தாலும், வெளியான பிறகு கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது, அந்தப் படம் திரையரங்குகளில் ரீ- ரிலீஸ் ஆகி வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான "அஞ்சான்" திரைப்படம், ஒரு மாஸ் ஆக்ஷன்-த்ரில்லர் படமாக ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்திருந்தது.
இந்த படத்தில் சூர்யா, ஒரு சக்திவாய்ந்த கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அத்தகைய திரைப்படம் தற்போது, ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது என்ற செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படம் இந்த வருட இறுதிக்குள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Listen News!