தமிழ் சினிமாவில் இருந்து அரசியலுக்கு நுழைந்தவர்களின் பட்டியலில் முன்னாள் தலைவர்கள் ஆன எம்ஜிஆர், ஜெயலலிதா, சீமான், விஜய்காந்த், கமலஹாசன் இவர்களது வரிசையில் தற்போது இளைய தளபதி விஜயும் இணைந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார் விஜய். அதன் பின்பு கட்சி அறிக்கையையும் கட்சி கொடியையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.
மேலும் தனது இலக்கு 2026 தான் என்று கூறிய விஜய், தனது முதலாவது அரசியல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் இன்றைய தினம் நடத்த உள்ளார். இதற்காக பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் குறித்த மாநாட்டில் பங்கெடுத்துள்ளனர்.
இதில் அதிகமானோரின் எதிர்பார்ப்பு என்னவென்றால் விஜய் எதைப் பற்றி பேச போகிறார் என்பது தான். ஆனாலும் இந்த மாநாட்டில் முழுக்க முழுக்க கட்சிக் கொள்கை பற்றி மட்டுமே விஜயின் அரசியல் உரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக கட்சி மாநாட்டிற்கு சென்ற தொண்டர்கள் வெயிலில் பாடுபட்டு வருவதோடு இன்னொரு பக்கம் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவங்களும் தற்போது பதிவாகியுள்ளன.
அதன்படி தமிழக வெற்றி கழகத்தின் கட்சி தொண்டர்கள் மாநாட்டிற்கு வரும்போது வீதியில் நடைபெற்ற லாரி விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்து உள்ளதோடு இன்னொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல சென்னையில் இருந்து மாநாட்டிற்கு சென்ற நபர் ஒருவர் ரயில் விபத்தில் உயிரிழந்து உள்ளார். அதாவது ரயில் மெதுவாக சென்றதால் விக்கிரவாண்டி தாண்டி குதித்த போது பலியாகியுள்ளார். மேலும் படு காயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Listen News!