• Jan 19 2025

நாகர்ஜுனா குடும்பத்துக்கு சோபிதா வைத்த செக்..! கண்டிஷனை ஏற்பாரா நாக சைதன்யா

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்து வருபவர் தான் நாகார்ஜுனா. இவரது மகனான நாக சைதன்யாவும் பிரபலமான நடிகராக காணப்படுகின்றார். இவர் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்பு இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தார்கள்.

2009 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானார் நாக சைதன்யா. இவர் இறுதியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி படத்தில் நடித்தார். அந்த படம் படுதோல்வியை அடைந்தது. அதன் பின்பு  நாக சைதன்யா நடிப்பில்  தண்டெல் படம் வெளியாக இருக்கின்றது.

2021 ஆம் ஆண்டு நாக சைதன்யாவும் சமந்தாவும் சட்டபூர்வமாக பிரிந்தார்கள். அதற்கு காரணம் சமந்தா நடித்தது தான் என இன்றளவும் பேசப்படுகின்றது. ஆனால் அதற்கான காரணத்தை இருவருமே வெளியே சொல்லவில்லை. அதன் பின்பு  நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இவர்களுடைய பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்நாட்டில் டேட்டிங் செய்தால் மாட்டி விடுவோம் என்ற நோக்கில் வெளிநாட்டில் அடிக்கடி டேட்டிங் செய்து வந்தார்கள். இது பற்றிய தகவல்கள், புகைப்படங்கள் வெளியான போதும் வாய் திறக்காமல் இருந்தார்கள். ஆனாலும் சமீபத்தில் நாக சைதன்யா - சோபிதாவின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.


இந்த நிலையில், சோபிதா துலிபாலா நாக சைதன்யாவுக்கு புது கண்டிஷன் போட்டு இருப்பதாக தெலுங்கு மீடியாக்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

அதாவது தமது திருமணத்திற்கு பிறகு ஹைதராபாத்தில் உள்ள தங்களது வீட்டில் தனது குடும்பத்துடன் செட்டில் ஆக வேண்டும் என்று நாக சைத்னயா விரும்புவதாகவும், ஆனால் அங்கு வாழ்ந்தால் சமந்தாவுக்கு நடந்தது போல தனக்கும் பிரிவு நேர்ந்து விடும் என்று அஞ்சுவதால், அப்படி வாழ வேண்டாம் தனி குடுத்தனம் செல்லலாம் என்று சோபிதா கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement