விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியல் ராமமூர்த்தியின் மறைவுக்கு பின்பு டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை சந்தித்து வருகின்றது.
கடந்த வாரம் இறுதியாக வெளியான தமிழ்நாடு டிஆர்பி ரேட்டிங்கில் வழமையாக முதல் பத்து இடத்திற்குள் வரும் பாக்கியலட்சுமி சீரியல் இந்த முறை 10 இடங்களுக்குள்ளேயும் வரவில்லை.
இந்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.
அதில் இனியா பாக்கியவிடம் டான்ஸ் கம்பெட்டிஷனில் கலந்து கொள்வதற்காக டான்ஸ் கிளாஸ் சேர்த்து விடுமாறு கேட்டுக் கொண்டிருக்கின்றார்.
ஆனாலும் பாக்கியா தனக்கு இருக்கும் கஷ்டத்தை எடுத்து சொல்லி இனியாவுக்கு புரிய வைக்கின்றார். அதன் பின்பு கோபி இனியாவுக்கு போன் பண்ணி விஷயத்தை கேட்க, அவர் நடந்தவற்றை சொல்லுகின்றார்.
அதன் பின்பு இனியாவை குறித்த டான்ஸ் மாஸ்டரிடம் கொண்டு போய் சேர்த்து விடுகின்றார் கோபி. மேலும் பீஸ் கொஞ்சம் அதிகமாக இருக்கு குறைக்க முடியுமா என்று கேட்க, அவரும் ஐந்தாயிரம் ரூபாய் குறைக்கின்றார். இவ்வாறு கோபி டான்ஸ் கிளாஸில் சேர்த்து விட்டதும் நீங்க கிரேட் அப்பா என அவரை புகழ்ந்து தள்ளுகின்றார் இனியா.
Listen News!