தமிழ் சினிமாவில் தனித்துவமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்த விஷ்ணு விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான ‘விஷ்ணு விஷால் ஸ்டூடியோ’ மூலம் பல முன்னணி படங்களை தயாரித்து வெற்றியை அடைந்துள்ளார். ஆனால் சமீப காலமாக, தயாரிப்பில் ஏற்பட்ட பெரிய நஷ்டங்களால் அவர் தனது தயாரிப்பு நிறுவனத்தை மூட இருப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக விஷ்ணு விஷால் தயாரித்த ‘மோகன்தாஸ்’ படம், பெரியளவில் நிதி நஷ்டத்தை ஏற்படுத்தியதால் அவர் பெரும் மனஉளைச்சலில் இருப்பதாகவும், இதுவே தயாரிப்பு நிறுவனத்தை முடிவுக்கு கொண்டு வரக்காரணமாக இருப்பதாகவும் திரை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
விஷ்ணு விஷால், முண்டாசுப்பட்டி, ஜீவா மற்றும் ராட்சசன் போன்ற வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றவர். மேலும் இவர் நடிப்பது மட்டும் இல்லாது ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோ’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியிருந்தார்.
இப்போது, இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் கடுமையான நஷ்டம் அடைந்ததால் விஷ்ணு விஷால் தன் நிறுவனத்தை மூடுவதற்கு முடிவு செய்திருக்கின்றார் எனத் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பில் பெரிய நஷ்டங்களை சந்தித்ததால் இனிமேல் விஷ்ணு விஷால் முழுமையாக நடிப்பிலேயே கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார்.
Listen News!