• Nov 21 2025

மதத்தின் பெயரில் பிறரை காயப்படுத்தாதீர்கள்..! ரசிகர்களின் நெஞ்சங்களைத் தொட்ட ரஹ்மானின் உரை

subiththira / 42 minutes ago

Advertisement

Listen News!

இந்தியாவின் இசை மாந்திரிகன் என்று அழைக்கப்படும் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் வழங்கிய ஒரு நேர்காணலில் கூறிய கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தையும் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது. 


உலகம் முழுவதும் பிரபலமான இசை நாயகன் ரஹ்மான், மதத்தின் மீது தனது பார்வையை மிகத் தெளிவாகவும் உணர்ச்சியுடனும் வெளிப்படுத்தியுள்ளார்.

 சமீபத்திய பேட்டியில் அவர், “நான் அனைத்து மதங்களுக்கும் ரசிகன். இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என அனைத்து மதங்கள் குறித்தும் படித்திருக்கிறேன். ஆனால் அந்த மதத்தின் பெயரால் பிறரை கொல்வது, தீங்கு செய்வது தான் எனக்கு ஒரேயொரு பிரச்சனையாக தெரிகிறது." என்று கூறியிருந்தார். 


மேலும், " நான் மகிழ்விக்க விரும்புகிறேன். என் நிகழ்ச்சியில், பல மதத்தவர்கள், பல மொழிகள் பேசுபவர்கள் பங்கேற்கிறார்கள். நாம் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றலாம். பல மொழிகள் பேசலாம். ஆனால் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாம் செய்யும் நல்ல விஷயங்களால் தான் மனிதகுலம் பயனடைகிறது." எனவும் தெரிவித்திருந்தார். 

இந்த வாக்கியங்கள் இணையத்தை முழுவதுமாக கவர்ந்து, உலகம் முழுவதும் ரஹ்மானின் மனிதநேய உணர்வுக்கு வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்த வரி உலகம் முழுவதிலும் உள்ள அவரது ரசிகர்களின் இதயங்களைத் தொட்டு, அனைவரையும் ஒரே மனித சமூகமாக பார்க்கும் பார்வையை வலுப்படுத்துகிறது.

Advertisement

Advertisement