தமிழ் சினிமாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களைக் உருவாக்கிக் கொண்ட பாலாஜி முருகதாஸ், தனது முதல் படமான ‘FIRE’ மூலம் பெரிய திரையில் நடிக்கத் தொடங்கியுள்ளார். இதன் வெற்றியைத் தொடர்ந்து தற்பொழுது 'RUNNER' படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் ஆக்சன் மற்றும் அதிரடிக் கதையாக உருவாகி வருகின்றது. இதைப் புரோமோட் செய்யும் வகையில், பாலாஜி முருகதாஸ் சட்டையை கழட்டி தனது மாஸான லுக்கில் ரசிகர்களை ஷாக்காக்கும் வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.
நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் மற்றும் மாடலிங் எனப் பல தரப்பில் தனது திறமையை வெளிப்படுத்திய பாலாஜி முருகதாஸ் ‘FIRE’ படத்தின் மூலம் தனது ஹீரோவாகும் கனவை நிறைவேற்றியுள்ளார். இதனை அடுத்து உருவாகும் 'RUNNER' படம் பெரிய வெற்றியை நோக்கிச் செல்லும் ஒரு வீரனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது.
RUNNER திரைப்படத்தின் புரோமோஷனுக்கு மிகவும் வித்தியாசமான முறையை தேர்வு செய்துள்ளார் பாலாஜி முருகதாஸ். RUNNER திரைப்படத்திற்காக பல மாதங்களாக கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு தனது உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார் பாலாஜி. இதனைப் பார்த்த ரசிகர்களிடம் படத்தை திரையில் பார்ப்பதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Listen News!