• Mar 19 2025

கூலி படத்துடன் மோதவுள்ள ஹிந்தி படம்..! ரசிகர்களுக்கு கிடைத்த ஷாக்கான தகவல்...!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' திரைப்படம் ஆகஸ்ட் 16 அன்று திரையரங்குகளில் வெளியாக இருந்தது. இதற்கிடையில் பாலிவூட்டின் முன்னணி நட்சத்திரமான ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள 'வார் 2' படமும் அதே நாளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக, இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் நேரடியாக மோதவிருக்கின்றன என்பதை அறியமுடிகிறது. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி திரை உலகமும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.


ரஜினிகாந்தின் 'கூலி' திரைப்படத்தை பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகின்றார். இதன் அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்தே மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியது.குறிப்பாக , கபாலி , காலா மற்றும்  ஜெயிலர் போன்ற படங்களில் கலக்கிய ரஜினி, இம்முறை வேறலெவல் கதைக்களத்துடன் ரசிகர்களை கவரவுள்ளார்.

'கூலி' படம், 80’களில் சென்னையில் நிகழ்ந்த சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இப்படத்தில் ரஜினியின் லுக் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது ரஜினியின் ஸ்டைல் மற்றும் ஆக்சன் என அனைத்தும் கலந்த மாஸ் படம் என்று சிலர் கூறுகின்றனர்.


மேலும் 2019ம் ஆண்டு வெளியான 'வார்' திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஹிருத்திக் ரோஷன் நடித்திருந்த இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை  பதிவு செய்தது. அந்த வரிசையில் 'வார் 2' திரைப்படமும் தற்போது தயாராகி வருகின்றது.

இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் சூழ்நிலையில் ரசிகர்கள் மத்தியில் யாருடைய படத்தினை முதலில் பார்ப்பதென்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும், தமிழ்நாட்டில் நிச்சயமாக 'கூலி' படத்திற்கே முன்னிலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ரஜினியின் படம் பொதுவாகப் பெரிய வரவேற்பைப் பெறுவதால், அவர் நடிக்கும் படத்திற்கு எப்போதும் மாஸான வரவேற்பு இருக்கும். 'கூலி' படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச அளவில் ஹிருத்திக் ரோஷனின் 'வார் 2'க்கு சிறப்பான வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement