கரூரில் விஜய்யை பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இந்த சம்பவம் ஒட்டு மொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது.
இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு கண்கலங்கி பேசியுள்ளார் மன்சூர் அலிகான். தற்போது அவர் கொடுத்த பேட்டி வைரல் ஆகி வருகிறது .
அதில் அவர் கூறுகையில் , கரூரில் உயிரிழந்த மக்களுக்கு எனது இரங்கலை தெரிவிக்கின்றேன். விஜயை பார்க்க ஆசையா வந்தவர்களை பாலாய் போன மோசமான அரசியல்வாதிகளின் சதி திட்டத்தால் மரணிக்க செய்யப்பட்டு இருக்கின்றார்கள். அந்த 41 இதயங்களுக்கும் எனது இரங்கலை தெரிவிக்கின்றேன்.
கரூர் எனது சொந்த ஊர். இன்னும் என்னுடைய வீடு அங்கு தான் உள்ளது. அவர்கள் உயிரிழக்கும் போது எவ்வளவு கஷ்டப்பட்டு மிதிபட்டு, அடிபட்டு, குழிக்குள் விழுந்திருப்பார்கள் என்று நினைக்கும் போதே மனம் வேதனையாக இருக்கின்றது. நமது நாட்டில் இப்படியும் நடக்கின்றது என நினைக்கும் போது அவமானமாக இருக்கின்றது.
விஜயின் வளர்ச்சி பிடிக்கவில்லை என்றால் அவரைக் கொள்கை ரீதியில் எதிர்க்கலாம். இதுவரை இடம் பெற்ற நான்கு கூட்டங்களிலும் விஜய் கேட்ட இடம் கொடுக்கவில்லை. இது அயோக்கியத்தனமான அரசியல் தானே.. சொந்த மக்களையே காவு கொடுத்துவிட்டு இப்படி நல்லவன் வேஷம் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இன்னும் ஆறு மாதத்தில் தேர்தல் நடக்க உள்ளது. அதில் மக்கள் யார் வரவேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள். அந்த கூட்டம் நடத்துவதற்கு 28 கண்டிஷன்கள் போட்டாங்க.. பெரிய கூட்டம் கூடும் என தெரிஞ்சும் போலீஸ் பாதுகாப்பு அதிக அளவில் கொடுத்திருக்க வேண்டும்.. ஆனால் ஏன் கொடுக்கல.?
முட்டுச்சந்தியில் பிரச்சாரம் நடத்துவதற்கு ஏன் அனுமதி கொடுத்தீர்கள்? கொஞ்சம் விட்டு இருந்தால் விஜய் தம்பியை குழிக்குள் போட்டு மூடி ஜன கன மன பாடி இருப்பார்கள். இது அரசியலா? கேவலமா இல்ல என்னுடைய முழு ஆதரவும் விஜய்க்கு தான் என்று மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
Listen News!