'இட்லி கடை' திரைப்படம் நாளை மறுதினம் திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது. இதனை தனுஷே இயக்கி நடித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இட்லி கடை படத்தை பல ஊர்களில் விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வந்தார் தனுஷ். தற்போது இந்த படத்துடைய ப்ரீ புக்கிங் ஆரம்பிக்கப்பட்டு டிக்கெட்டுக்கள் விற்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இட்லி கடை படம் ப்ரீ புக்கிங்கில் செய்துள்ள வசூல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இட்லி கடை ப்ரீ புக்கிங்கில் தற்போது வரை ரூ. 2 கோடி அளவில் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் இந்த கலெக்சன் மேலும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
அதோடு ஆயுத பூஜை என தொடர் விடுமுறை நாட்கள் இருப்பதும் படத்துக்கு பாசிட்டிவாக அமைந்துள்ளது. இதனால் இட்லி கடை பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றால் மிகப்பெரிய வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!