சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மாடியில் தனியாக பேசிய ரவி முத்துவிடம், க்ரிஷ் இந்த வீட்டில் இருந்தால் சொத்து பிரச்சினை வரும் என்று மனோஜ் சொல்லுகின்றார். மேலும் இதனால் பிற்காலத்தில் அவனுக்காக சொத்தில் நான்கு பங்கு போட வேண்டும் என்று மனோஜ் பேச, முத்துவும் ரவியும் டென்ஷன் ஆகின்றார்கள்.
அதற்குப் பிறகு க்ரிஷ் இரவில் தூங்கும் போது அவனை ரோகிணியின் ரூமுக்குச் சென்று தூங்குமாறு மீனா அனுப்புகின்றார். அங்கு திடீரென விஜயா வெளியே வர, அங்கிருந்த சேயரில் க்ரிஷ் அமர்ந்து கொள்கின்றார். எனினும் விஜயா நமக்கு எதுக்கு வம்பு என்று மீண்டும் உள்ளே சென்று கதவை சாத்திக் கொள்கின்றார்.
காலையில் மனோஜ் எழுந்து க்ரிஷ் பக்கத்தில் தூங்கியதை பார்த்ததும் அம்மா என கத்திக்கொண்டு பஞ்சாயத்தை கூட்டுகின்றார். இதன்போது தனக்கு மனோஜை ரொம்ப பிடிக்கும் என்பதால் அவருடன் படுத்ததாக க்ரிஷ் கூறுகின்றார்.

இதை தொடர்ந்து இந்த விஷயத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பார்வதி வீட்டில் ரோகிணியும் சிந்தாமணியும் மீண்டும் கூடி பேச, இறுதியில் ரோகிணி, மனோஜ் உடன் க்ரிஷ் நெருங்க நினைப்பதால் ரூமை எப்பவும் பூட்டி வைக்குமாறும், அவனுடன் நெருக்கம் காட்ட வேண்டாம் என்றும் விஜயா ரோகிணிக்கு கண்டிஷன் போடுகிறார்.
இன்னொரு பக்கம், நீத்து வேண்டும் என்று ரவியுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை ஸ்ருதிக்கு அனுப்புகின்றார். இதனால் ஸ்ருதி டென்ஷன் ஆகி ரவியிடம் சொல்ல, ரவி நீத்துவிடம் வந்து என்னுடைய பர்சனல் விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று வார்னிங் கொடுக்கின்றார்.
ஆனாலும் தான் நினைத்தது போலவே நடந்து விட்டதாக நீத்து சந்தோஷப்படுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!