• Feb 09 2026

சூடு பிடிக்கும் ‘அரசன்’ படம்.. படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட் என்னன்னு தெரியுமா.?

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதையம்சத்தையும் நிஜத்தன்மையையும் இணைத்துச் சொல்வதில் முன்னணியில் உள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். அவரது படைப்புகள் ரசிகர்கள் மட்டுமல்ல, திரைப்பட உலகினரிடமும் பெரும் கவனத்தை பெற்றவை. 


ஆடுகளம் முதல் அசுரன் வரை, வெற்றிமாறன் இயக்கும் ஒவ்வொரு படமும் ஒரு தனித்துவத்தை உருவாக்கியுள்ளது. இப்போது அதே வரிசையில் அவர் இயக்கும் புதிய படம் ‘அரசன்’ மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த படத்தின் முக்கிய சிறப்பு என்னவென்றால், தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவரான சிலம்பரசன் (சிம்பு) முதன்முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பது தான். இந்தக் கூட்டணி அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே, ரசிகர்கள் வட்டாரங்களில் மிகுந்த ஆர்வத்தை தூண்டியுள்ளது.


இப்படம் வடசென்னையை மையமாகக் கொண்டு உருவாகும் கேங்ஸ்டர் திரைப்படம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், ‘அரசன்’ படத்தில் சிம்புவுடன் பல திறமையான நடிகர்களும் இணைந்து நடிக்கிறார்கள். 

இந்நிலையில், தற்பொழுது வெளியான தகவல்களின் படி, வருகிற 8ம் தேதி ‘அரசன்’ படத்தின் பூஜை கோவில்பட்டியில் நடைபெறவுள்ளது. மேலும், பூஜை நிகழ்ச்சிக்குப் பிறகு, 9ஆம் தேதி முதல் படப்பிடிப்பு அதிகாரபூர்வமாக தொடங்கவுள்ளது எனவும் குறிப்பிடப்படுகிறது. 

Advertisement

Advertisement