பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, சரவணன் மயிலைப் பார்த்து துரோகியை கூட நம்பிடலாம், ஆனால் இவளை மட்டும் நம்பவே கூடாது என்கிறார். பின் கோமதி ஏமாத்தினால் என்று சொல்லுறியே அப்படி என்ன தான் ஏமாத்தினால் என்று கேட்கிறார். அதனை அடுத்து சரவணன் எல்லாருகிட்டயும் மயில் MA ஒன்னும் படிக்கல வெறும் +2 தான் படிச்சால் என்கிறார்.

அதைக் கேட்டு எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். மேலும் சரவணன், மயில் முதல் டீச்சர் வேலை ஒன்னும் பார்க்கல ஹோட்டல் ஒன்றில தான் வேலை செய்திட்டிருந்தா என்கிறார். அதைக் கேட்ட கோமதி கோபப்படுறார். அதனை அடுத்து பாண்டியன் மயிலைப் பார்த்தால் பொய் சொல்லுற மாதிரி தெரியல நீ சும்மா கோபத்தில கத்தாத என்கிறார்.
பின் சரவணன் இவள் அதையெல்லாத்தையும் விட கர்ப்பமா இருக்கிறேன் என்றும் பொய் தான் சொன்னவள் என்கிறார். அதைக் கேட்ட மயில் குழந்தை விஷயத்தில பொய் சொல்லேல என்கிறார். அதனைத் தொடர்ந்து கோமதி மயங்கி விழுறார். பின் சரவணன் அதுமட்டுமில்ல இவளுக்கு என்னை விட வயசு கூட என்றும் சொல்லுறார்.

இதனைத் தொடர்ந்து இவள் என்ன செய்திருந்தாலும் பரவாயில்ல என்கிட்ட உண்மையை சொல்லியிருக்கலாம் என்று கோபமாக கத்துறார் சரவணன். பின் கதிர் அண்ணா இதையெல்லாம் மனசுக்குள்ள வைச்சிருக்காமல் என்கிட்ட தன்னும் சொல்லியிருக்கலாம் என்கிறார். அதுக்கு சரவணன் நீங்க கஷ்டப்படுவீங்க என்று தான் யாருகிட்டயும் சொல்லேல என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!