• Aug 24 2025

விஜயகாந்த் பெயரை விஜய் அரசியலில் பயன்படுத்த முடியாது.! பிரேமலதா காட்டம்...

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழக அரசியலில் சமீப காலமாக அதிகமாக பேசப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக, தவெக தலைவர் விஜய் நடத்திய மாநாடு காணப்படுகிறது. அவரது அரசியல் களம் மற்றும் அந்த பின்னணியில் நடைபெறும் செயல் திட்டங்கள் பல்வேறு தரப்புகளில் விவாதிக்கப்படுகின்றன.


இந்த நிலையில், தேமுதிக நிறுவனராகவும், நடிகராகவும் விளங்கிய ‘கேப்டன்’ விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக செயலாளரான பிரேமலதா விஜயகாந்த், சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய் குறித்த தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஒரு முக்கிய ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில், பிரேமலதா விஜயகாந்திடம், “விஜய் தலைமையிலான தவெக கட்சியில், கேப்டனின் படங்களை, அவருடைய பெயரை மக்கள் கூட்டம் தேடுவதற்காக பயன்படுத்துகிறது என்பதை நீங்கள் எப்படி பார்கிறீர்கள்?” என reporter ஒருவர் கேள்வி எழுப்பினார்.


இதற்கு பதிலளித்த பிரேமலதா, "விஜயகாந்தின் படத்தையும் பெயரையும் அரசியலுக்காக விஜய் பயன்படுத்தினால் அதை மக்கள் ஏற்க மாட்டார்கள். கேப்டனை அரசியல் ரீதியாக தவெக அணுகும் பட்ஷத்தில் அது தவறு எனக் கூறியுள்ளார். கேப்டனுக்கு நிகர் கேப்டன் தான், யாரும் அவரது இடத்தை நிரப்ப முடியாது.." என்றார். 

இது தமிழ்நாட்டின் எதிர்கால அரசியலிலும், திரையுலகத்தில் இருந்து அரசியலுக்கு வரும் புதிய முயற்சிகளிலும் ஒரு முக்கியமான குரலாகக் காணப்படுகிறது. பிரேமலதாவின் பேட்டி வெளியாகிய பிறகு, பல தேமுதிக ஆதரவாளர்கள், விஜயகாந்த் ரசிகர்கள், மற்றும் மக்கள் என அனைவரும் சமூக வலைத்தளங்களில் பல கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

Advertisement

Advertisement