• Jan 19 2025

விஜயகாந்தின் உடல் நிலையில் ஏற்பட்ட பின்னடைவு- மருத்துவமனைக்கு பயங்கர போலீஸ் பாதுகாப்பு

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் காலத்தால் அழிக்க முடியாத பிரபலயமாக வலம் வருபவர் தான் நடிகர் விஜயகாந்த். இவர் தற்பொழுது நடிப்பிலிருந்து விலகினாலும் இவர் செய்த நன்மைகள் பற்றி சொல்லாத பிரபலங்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.மிகவும் கம்பீரமாக அரசியல் மற்றும் சினிமாவில் சாதித்த இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் அரசியிலிருந்தும் நடிப்பிலிருந்தும் ஒதுங்கி சிகிச்சை பெற்று வருகின்றார்.

கடந்த சில நாட்களாக நடிகர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து வரும் தகவல்கள் ரசிகர்களுக்கு கடும் சோகத்தை கொடுத்து வருகிறது.இவர் உடல்நிலை சரியாகி மீண்டும் நல்லபடியாக வலம் வர வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


விஜயகாந்தின் உடல்நிலை பாதிப்பு மூன்றாவது கட்டத்தில் இருப்பதாகவும் அவருக்கு மீண்டும் தீவிர சிகிச்சை தேவை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் அவருக்கு நுரையீரல் பிரச்சனை இருப்பதால் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.


இந்த நிலையில் சென்னை மியாட் மருத்துவமனைக்கு நடிகர் சங்க தலைவர் நாசர், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் விஜயகாந்தை நேரில் சென்று நலம் விசாரித்துள்ளனர்.அத்தோடு நடிகர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனைக்கு பயங்கர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement