மகிழ் திருமேனி - அஜித் கூட்டமைப்பில் விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகின்றது.
இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக விடாமுயற்சி திரைப்படம் காணப்படுகிறது. மேலும் மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித், திரிஷா மற்றும் அர்ஜுன் மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படம் இது ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்கள்.
காணாமல் போன தனது மனைவியை சாதாரணமாக தேடும் ஒரு நபர், இடையே வரும் தடங்களை எல்லாம் தாண்டி பொறுமையாக இருந்து அவரை எப்படி கண்டுபிடிக்கின்றார், அவர் பொறுமையை இழக்கும் போது என்னென்ன நடக்கின்றது என்பதையும் அழகாக எடுத்துக்காட்டியுள்ளார் மகிழ் திருமேனி.
இந்த படத்தில் திரிஷா தனக்கு இன்னொருவருடன் பழக்கம் இருப்பதாக சொல்லி அஜித்தை விவாகரத்து செய்ய முயல்கின்றார். ஆனாலும் அஜித் அவரை இறுதியாக அம்மா வீட்டிற்கு கூட்டிட்டு போகும் வழியிலேயே இந்தக் கதைக்கான பயணமும் ஆரம்பிக்கின்றது.
இந்த நிலையில் இந்த படத்தில் திரிஷா சொன்ன அந்த பிரகாஷ் என்ற நபர் காட்டப்படவில்லை. அது பற்றி மகிழ் திருமேனியிடம் கேள்வி எழுப்பிய போது, அவருக்கான முக்கியத்துவம் இதற்கு அவசியம் இல்லை. அவர் ஜஸ்ட் ஒரு கேரக்டர் தான். அவர் இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி. அவரைப் பற்றியது இல்லை இந்த கதை என தெரிவித்துள்ளார்.
Listen News!