சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் , மனோஜ் வீட்டிற்கு வந்ததும் பிசினஸ் நன்றாக போனதாக சொல்லி சந்தோஷப்படுகின்றார். ஆனால் ரோகிணி எதுவும் பேசாமல் மௌனமாக நின்று கொண்டு கதவை சாத்தி விட்டு வருமாறு சொல்லுகின்றார்.
அதைக் கேட்ட மனோஜ், ரொமான்ஸ் மூட்டுல இருக்கியா என்று கதவை சாத்திவிட்டு அவரை வந்து பார்க்க, ரோகிணி தனது உடம்பில் கல்யாணியின் ஆவி வந்து விட்டதாக மனோஜை பயமுறுத்துகின்றார்.
மேலும் க்ரிஷை பாசமாக பார்க்க வேண்டும், இல்லை என்றால் நான் உனது அம்மாவ ஒன்னும் இல்லாமல் செய்துடுவேன் . இந்த விஷயத்தை யார் கிட்டயும் சொல்லவும் கூடாது என்று மனோஜை பயமுறுத்துகின்றார்.

அத்துடன் க்ரிஷ் பசில இருக்கின்றான் போய் அவனுக்கு சாப்பாடு ஊட்டி விடு அதை நான் பார்க்க வேண்டும் என்று சொல்ல , மனோஜூ ம் பயத்தில் போய் க்ரிஷ்க்கு சாப்பாடு ஊட்டி விடுகின்றார். இதனை வீட்டில் எல்லோரும் அதிர்ச்சியாக பார்க்கின்றார்கள்.
அங்கு வந்த விஜயா, மனோஜை தடுத்தபோதும் அவர் நிறுத்தவில்லை. அதற்கு பிறகு க்ரிஷ் இன்றைக்கு உங்களுடன் தூங்கவா என்று கேட்கவும் அதற்கும் சம்மதம் தெரிவிக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!