பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கதிர் ராஜியைப் பார்த்து நல்லவங்களுக்குத் தான் எல்லா கஷ்டமும் வரும்... அண்ணா லவ் பண்ண பொண்ணையே அப்பா வேணாம் என்று சொன்னதால அவங்கள வேணாம் என்று விட்டுட்டார். அப்படிப் பட்ட அண்ணாக்குத் தான் எல்லா பிரச்சனையும் வருது என்கிறார். பின் ராஜி மயிலக்கா நகை விசயத்திலயும் பொய் சொல்லியிருக்காங்க என்கிறார்.

அதைக் கேட்ட கதிர் நீ சொல்லுறது எல்லாம் உண்மையா? உனக்கு எப்புடித் தெரியும் என்று கேட்கிறார். அதுக்கு ராஜி தாலி பிரிச்சுக் கோர்க்கிற function நடக்கும் போது தான் தெரிய வந்தது என்கிறார். அதனை அடுத்து கதிர் இதை ஏன் முன்னாடியே சொல்லேல என்று பேசுறார். அதுக்கு ராஜி இப்புடி நிறைய பொய் சொல்லுவாங்க என்று கொஞ்சம் கூட நினைக்கல என்கிறார்.
அதனை அடுத்து, கதிர் இந்தப் பிரச்சனை எப்புடி சரியாகும் என்று தெரியல என்று சொல்லி அழுகிறார். மறுநாள் காலையில கதிரும் ராஜியும் செந்தில் வீட்ட போய் நடந்ததெல்லாத்தையும் சொல்லுறார்கள். அதைக் கேட்ட செந்தில் அப்பா ஒழுங்கா விசாரிக்கலயா என்று சொல்லிப் பேசுறார். அதனைத் தொடர்ந்து செந்திலும் மீனாவும் வீட்ட போவம் என்று சொல்லி கிளம்புறார்கள்.

பின் மீனா ராஜியை தனியா கூப்பிட்டு நகை விஷயம் தெரியவந்தப்போவே எல்லாருகிட்டயும் சொல்லியிருக்கணுமோ என்று கேட்கிறார். மறுபக்கம் பாண்டியன் சரவணனை நினைத்து கவலையாக இருக்கிறார். பின் கோமதி இதை ஜோசிக்க கோபம் கூடுது என்கிறார். அதனை அடுத்து மயில் பாண்டியன் காலில விழுந்து மன்னிப்புக் கேட்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!